‘தானே’ புயலால் கடும் சேதத்துக்குள்ளான கடலூர் மற்றும் புதுச்சேரியை பார்வையிட மத்தியக் குழு இன்று சென்னை வருகிறது. புதுவைக்கு இன்றும், கடலூருக்கு நாளையும் செல்லும் குழுவினர் மக்களைச் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிகின்றனர். மத்திய உள்துறை இணை செயலாளர் லோகேஷ் தலைமையில் மத்தியக் குழுவினர் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழுவில் வேளாண்மை, குடிநீர், நிதி, சுகாதாரம், மின்சாரம், ஊரக மேம்பாடு, நீர்வளம், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் அறிவிப்பின்படி அந்தக் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பிற்பகலில் அவர்கள் புதுவை சென்று அங்கு உள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர். மக்களையும் சந்தித்து குறைகளை கேட்கின்றனர்.
அதன்பின், அதிகாரிகள் குழுவினர் கடலூருக்கு நாளை செல்கின்றனர். அங்கு சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, மக்களைச் சந்தித்து குறைகளை கேட்கின்றனர். பின் அவர்கள் மீண்டும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுகின்றனர். மத்தியக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.