ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக டெல்லியில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை சில இடங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

அதன்படி, 26ம் தேதி காலை 6 மணி முதல் 12.30 மணி வரை ராஜீவ் சௌக், பட்டீல் சௌக், சென்ட்ரல் செகரடேரியட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ், பிரகதி மெய்டன், பராகம்பா சாலை, கான் மார்க்கெட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும், இந்த ரயில் நிலையங்களில் மாற்றுத் தடங்களில் இயக்கப்படும் ரயில்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, ஜனவரி 25ம் தேதி பிற்பகல் 2 மணி முதல், 26ம் தேதி பிற்பகல் 2 மணி வரை அனைத்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு நிறைவடைந்ததும் வழக்கம் போல ரயில் போக்குவரத்து சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.