நமதூர் அதிரை மட்டுமின்றி பல ஊர்களிலும் அதிகமாக இரவு நேரத்திலேயே மின் தடை ஏற்படுகிறது.இந்த இரவு நேரங்களில் தான் மாணவர்கள் தங்களுடைய பாடங்களை படித்து மனனம் செய்வார்கள்.
குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் + 2 மாணவர்கள் எப்படி தேர்விற்கு தங்களை தயார் செய்வார்கள்? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!
நமதூரில் இரவு நேரங்களில் அதாவது மாணவர்கள் படிக்கும் நேரங்ககளில் 7 மணி முதல் 8 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.பின்பு 10 மணி முதல் 10.30 மணி அல்லது 11 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.
இப்படி மாணவர்கள் படிக்கும் நேரங்களில் மின் தடை செய்தால் எப்படி அவர்கள் படிப்பார்கள்?
இந்த மின் தடையை மாணவர்களின் தேர்வு முடியும் வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும்.இதுவே ஒட்டு மொத்த மாணவர்களின் வேண்டுகோளாகும்.
Thanks For ur Social Service...
ReplyDeleteUngalin Sevai thodara Valththugirom
ReplyDelete