3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் இன்று (28.02.2012) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. களம் இறங்கிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தனர்.
தில்சன் 160 ரன்களும், சங்கக்கரா 105 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், குமார், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். பின்பு 321 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. சேவாக் 30 ரன்களும், தெண்டுல்கர் 39 ரன்களும் மற்றும் காம்பீர் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கோக்லி அபாரமாக விளையாடி 133 ரன்களும், ரெய்னா 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு அடிகோலினர். 36.4 ஓவர்களில் இந்திய அணி தனது இலக்கான 321 ரன்களை எடுத்தது. போனஸ் புள்ளிகளுடன் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இறுதி போட்டிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.