மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடர் தோல்வியால் பல வீரர்கள் தலை உருளும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றதும் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
மார்ச் 12 தொடங்க இருக்கும் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சொதப்பிய சேவாக்குக்கும் காயம் ஏற்பட்டதால் ஜாகீர் கான் மற்றும் உமேஷ் யாதவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கடைசி போட்டியில் அசத்திய கோஹ்லி தோனிக்கு துணையாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான், மித வேகப்பந்து வீச்சாளர் அஷோக் திண்டா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
தோனி, விராத் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ப்ரவீன் குமார், வினய்குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், மனோஜ் திவாரி, அஷோக் திண்டா.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.