N

29.2.12

மதுரை: சாம்பிராணி குடோனில் திடீர் தீ விபத்து


மதுரை எஸ்.எஸ்.காலனியில் சாம்பிராணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணிய பிள்ளை தெருவில் சாம்பிராணி, ஊதுபத்தி குடோன் ஒன்று உள்ளது. இன்று காலை அந்த குடோனில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதி காரி சுரேஷ் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.