N

18.2.12

நடுக்கடலில் மீனவர்கள் கொலை அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை!

 கொல்லம் அருகே நடுக்கடலில் குமரி மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடவடிக்கைகளுக்கு இத்தாலி கப்பல் ஊழியர்கள் ஒத்துழைக்க மறுப்பது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உள்துறை மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். கேரளாவில் உள்ள கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மற்றும் கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலி கப்பல் ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் இத்தாலி கப்பலில் உள்ள 6 கடற்படை ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்தது. 


இது தொடர்பாக இத்தாலி கப்பல் ஊழியர்கள் மீது கொல்லம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்வதற்காக கொச்சி நகர போலீஸ் கமிஷனர் அஜீத்குமார் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கப்பல் கேப்டன் ஒம்பர்டோ வெட்டேலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ÔÔஇத்தாலி தூதரகம் கேட்டுக் கொண்டால்தான் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்ÕÕ என்று கேப்டன் ஒம்பர்டோ கூறினார். இதற்கிடையே இத்தாலிய தூதரக அதிகாரி ஜியாம்பவுலோ குட்டிலியோவுடன் கமிஷனர் அஜீத்குமார், கொல்லம் எஸ்பி சாம் கிறிஸ்டி டேனியல் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 
சம்பவம் நடந்தது சர்வதேச கடல் எல்லை என்பதால் கப்பல் ஊழியர்களை விசாரணைக்கு அனுப்ப முடியாது. இத்தாலி கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும்
 என்று அவர் கூறினார். ஆனால் இதற்கு கமிஷனர் மறுத்துவிட்டார். 


துப்பாக்கி சூடு நடத்திய 6 ஊழியர்களையும் தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே கப்பலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியும்ÕÕ என்று அவர் இத்தாலி அதிகாரியிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று, வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை நடத்தினார். இத்தாலி கப்பல் ஊழியர்களை கைது செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.