N

24.2.12

23ந் தேதி நடந்த கொள்ளையும் என்கவுண்டரும்!!!

சென்னை அருகே பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23 ந் தேதியும், கீழ்க்கட்டளை ஐ.ஓ.பி. வங்கியில் 20 ந் தேதியும் கொள்ளை நடந்தது. கொள்ளை நடந்த இரு நாட்களும் திங்கட்கிழமை. அன்று வார தொடக்க நாளில் பரபரப்பாக இருக்கும் என்பதால் அந்த நாளை தேர்வு செய்துள்ளனர்.
 
5 பேரும் கொள்ளையடிக்க தேர்வு செய்த நாள் 23ந் தேதி, அதே 23ந் தேதியான அன்று அவர்கள் என்கவுண்டரால் கொல்லப்பட்டனர்.
 
தமிழ்நாட்டில் என்கவுண்டரில் 5 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது இது தான் முதல் முறை. இதுவே மிகப் பெரிய என்கவுண்டர். இதற்கு முன் ரவுடிகள் கொள்ளையர்கள் ஒன்றிரண்டு பேர் தான் கொல்லப்பட்டனர். மொத்தமாக 5 பேர் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2002 ல் பெங்களூரில் இமாம் அலி கூட்டாளிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2003 ல் தாதா வீரமணியும், 2010 ல் கோவையில் பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் போலீசாருடன் நடந்த மோதலில் பலியானார்கள்.
சென்னையில் நள்ளிரவில் என்கவுண்டர்!
 5 கொள்ளையகள் சுட்டுக்கொலை! 






                                                           Source:Nakkheeran.In
















0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.