கடந்த இரு நாட்களாக ஒரு கல்லூரிக்கும் ஒரு ஊருக்கும் இடையிலான புகைச்சல் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் அமைந்துள்ளது தமிழன் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியின் பேருந்துகள் மாதவலாயம் என்ற ஊர் வழியாக செல்வது வழக்கம்.
மாதவலாயம் ஊரின் சாலைகள் மிகக் குறுகலானவை. எதிர்புறத்தில் வாகனங்கள் வந்தால் வழிவிட, சாலையினைவிட்டு வாகங்கள் கீழே இறங்கவேண்டும். இந்நிலையில், தமிழன் பொறியியல் கல்லூரி பேருந்தின் ஓட்டுனர்கள் மாதவலாயம் சாலையில் மிக வேகமாக செல்வதும் அவ்வப்போது பொதுமக்கள்மீது உரசி செல்வதும் நடத்துள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சாலையின் ஓரத்திலுள்ள கால்வாய்களில் தவறி விழுந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதனால் இக்கல்லூரி பேருந்து ஓட்டுனர்களின்மீது ஊர் மக்களுக்கு ஏற்கெனவே எரிச்சலும் கோபமும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாதவலாயம் பகுதி வழியாக வந்த தமிழன் கல்லூரி பேருந்து பொதுமக்களை உரசிச் சென்றதோடு மட்டுமல்லாமல், பேருந்தினுள் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டு இருக்கிறார்கள். இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி, ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இது பேருந்திலுள்ள மாணவர்களுடன் கைகலப்பாக மாறி, அது தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து சில பேர் மாதவலாயம் ஊருக்குள் வந்து, தகாத வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளனர். எனினும் பொதுமக்கள் அமைதி காத்துள்ளனர். சம்பவ தினத்தன்று மாலையில் கல்லூரியிலிருந்து திரும்பிய பேருந்துகள், வழக்கம் போலவே மிக வேகத்துடனும் பேருந்தினுள்ளிலிருந்த மாணவர்கள் தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டு கொண்டும் சென்றதால், பொதுமக்கள் மீண்டும் அந்த வாகனங்களை சிறைபிடித்தனர்.
இதனால் பொதுமக்களுக்கும் பேருந்திலிருந்த மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த தோவாளை தாசில்தார் வசந்தராஜன் மற்றும் ஆரல்வாய் மொழி காவல்துறை ஆய்வாளர் வேல் மணி ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் போது தகவலறிந்து கல்லூரியின் தாளாளரும் முதல்வருமான அகிலன் சம்பவ இடம் வந்துள்ளார். ஆனால், அவர் வந்த ஸ்கார்ஃபியோ வாகனத்தில் வேறு சிலர் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த ஊர் மக்கள், ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே முதல்வர் அகிலன் வந்த வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது அதில், உருட்டுக் கட்டைகள், கம்பு, கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தை கண்டு அதிர்ச்சியான பொதுமக்கள், அவற்றை உடனடியாக காவல்துறையினரிடம் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை கல்லூரி முதல்வர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்தது.
இதனால் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் பிரச்சனை ஆரம்பமானது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சிலர் பொதுமக்களில் சிலரைத் தாக்கியுள்ளனர். இச்செய்தி ஊருக்குள் பரவியதும் ஆத்திரமுற்ற பொதுமக்கள் கல்லூரி வாகனங்கள் மற்றும் காரை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
சமபவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல்துறை அதிகாரி பிரவேஷ்குமார், மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையே பிரச்சனை அதிகரிக்கவே, கூட்டத்தைக் கலைக்க தடியடிக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் சிதறி ஓடினார்கள். இந்த நிலையிலும் கல்லூரி மாணவர்கள் அங்கிலிருந்த லாயம் விலக்கு என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கும் காவல்துறை தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்து, போக்குவரத்தை சரி செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாதவலாயம் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கல்லூரி தாளாளரும் முதல்வருமான அகிலன், 4-ம் ஆண்டு மாணவர் டேவிட் ரெக்ஸ், அனி ஷோபியா மற்றும் ஸ்டெல்லா ஆகிய 5 பேர் மீது 506 (2)-கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததோடு கல்லூரி முதல்வர் அகிலன் மற்றும் மாணவர் டேவிட் ரெக்ஸ் ஆகியோரை கைது செய்தது.
இது போன்று கல்லூரி ஊழியர் ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாதவலாயத்தை சேர்ந்த ரக்கீஷ் அகமது, முகமது ரபீக், அகமது ரிபாய் கபீர், அபு, மாகின் ஆகியோர்மீது கல்லூரி வாகனத்தை அடித்து சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரக்கீஷ் அகமது, முகமது ரபீக், அகமது ரிபாய் கபீர் ஆகியோரை கைது செய்தது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும் பதட்டத்தை தணிக்கவும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கல்லூரி முதல்வரே ஊர் பொதுமக்களுக்கு எதிராக ரவுடிகளைப் போன்று ஆயுதங்களுடன் வந்தது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source:Inneram Inaiyam
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.