பாட்னா:கடனாக வாங்கிய 300 ரூபாயை திரும்ப அளிக்காததால் இளைஞர் ஒருவரின் கையை வெட்டிய கொடுமையான சம்பவம் பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.
தினக்கூலியாக வேலை பார்க்கும் 20 வயதான ராம்ஸாகர் சந்திரவன்ஷிக்கு தனது காண்ட்ராக்டரிடமிருந்து இந்த துயரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
காண்ட்ராக்டரிடமிருந்து ராம்ஸாகர் ரூ.300 கடனாக வாங்கியிருந்தார். இந்த பணத்தை திரும்ப அடைக்காததால் ராம்ஸாகரிடம் காண்ட்ராக்டர் கூலி இல்லாமல் வேலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் ராம்ஸாகர் அதற்கு மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு கும்பல் ஆட்கள் ராம் ஸாகரை தாக்கி, அவரது கையை வெட்டி எடுத்துள்ளனர். தாக்குதலில் 2-வது கையும் காயமடைந்துள்ளது.
எவ்வித தயவு, தாட்சணியமுமின்றி கும்பல் தன்னை தாக்கியதாக ராம்ஸாகர் கூறுகிறார். தற்போது பாட்னா மருத்துவக்கல்லூரியில் சிகிட்சைப் பெற்று வருகிறார் ராம்ஸாகர். இச்சம்பவம் இட்டுக்கட்டப்பட்டது என்று கூறி போலீசார் ஆரம்பத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்ய தயங்கியதாக ராம்ஸாகர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.