N

4.3.12

கரண்ட் இல்லாததால் வந்த வினை:அரிக்கேன் லைட் விழுந்து தீப்பிடித்து பெண் பலி!!


மின் தடையால் ஏற்பட்ட இருளைப் போக்க, ஹரிகேன் விளக்கை ஏற்றி வைத்து தூங்கிய ஒரு தம்பதி, அந்த லைட் கீழே விழுந்து தீப்பிடித்ததில் கருகின. இதில், மனைவி உயிரிழந்தார். கணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி திருநகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டித்துரை(40). இவருடைய மனைவி முனியம்மாள் (35). இவர்கள் வசிக்கும் பகுதியில் பல மணி நேர மின்தடை அமலில் உள்ளது.

சம்பவத்தன்று இரவு இவர்கள் வீட்டில் ஹரிகேன் லைட்டைப் பொருத்தி வைத்திருந்தனர். இரவு லைட்டை அணைக்காமல் அதை டிவி ஸ்டாண்ட் மீது வைத்து விட்டு தூங்கி விட்டனர்.

தூக்கக் கலக்கத்தில் முனியம்மாளின் கால் டிவி ஸ்டாண்ட் மீது பட்டு, அது அசைந்து, மேலே இருந்த ஹரிகேன் லைட் அவர் மீது விழுந்தது. இதில் முனியம்மாளின் சேலை மீது தீப்பிடித்துக் கொண்டது. உடல் முழுவதும் தீ பரவி அவர் அலறித் துடித்தார். அவரைக் காப்பாற்ற பாண்டித்துரை போராடியபோது அவர் மீதும் தீப்பிடித்துக் கொண்டது.

இருவரும் தீயில் சிக்கி உடல் கருகினர். உடனடியாக அவர்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முனியம்மாள் உயிரிழந்தார். பாண்டித்துரைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.