புதுடெல்லி : குண்டு பல்புக்கு பதிலாக, வெள்ளை ஒளியை உமிழும் சிஎப்எல் பல்புகள் இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தாலியா கூறினார். இதுபற்றி சந்தாலியா நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தற்போது குண்டு பல்புகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரகாசிக்க அதிகமான மின்சாரம் தேவை. எனவே நகரின் மின்தேவையும் கூடுதலாக இருக்கிறது. மேலும், இவை அதிகளவில் வெப்பத்தையும் உமிழ்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே நகரின் மின்சார தேவையை குறைக்க குண்டு பல்புகளுக்கு பதில் சிஎப்எல் எனப்படும் வெள்ளை ஒளியை உமிழும் பல்புகளை பயன்படுத்த நகரவாசிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவை குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளியை தருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாக உள்ளன. இந்த நடைமுறையை ஊக்கப்படுத்தும் விதத்தில் குண்டு பல்புகளை கொண்டு வந்து மாநகராட்சி அலுவலகங்களில் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக சிஎப்எல் பல்புகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சென்று குண்டு பல்புகளை கொடுத்துவிட்டு மாற்று பல்புகளை பெறுக் கொள்ளலாம். ஆனால் கொண்டு வரும் குண்டு பல்புகள் எரியும் நிலையில் இருக்க வேண்டும். ஒரு குண்டு பல்புக்கு ஒரு சிஎப்எல் பல்பு வழங்கப்படும். இதனால் டெல்லிவாசிகள் மின்சார கட்டணத்தில் மாதம் க்ஷீ 300 முதல் 400 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக க்ஷீ 10 கோடியை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. குண்டு பல்புகளுக்கு பதில் சிஎப்எல் பல்புகளைப் பெற வருபவர்கள் தங்களின் அடையாள அட்டைகளை கொண்டு வந்து காட்டிவிட்டு பல்புகளை பெறலாம். இவ்வறு யோகேந்தர் சந்தாலியா கூறினார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.