N

4.2.11

தஞ்சையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப். 3: தஞ்சையில் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.    தஞ்சை சிவகங்கை பூங்கா முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் கே. அபிமன்னன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் எஸ். ஞானமாணிக்கம் தொடங்கிவைத்தார்.    தஞ்சை ரெட்டிப்பாளையம், காமாட்சிபுரம், சக்கராம்பேட்டை பகுதிகளில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5  லட்சமும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகரச் செயலர் பி. செந்தில்குமார், மாவட்ட செயற்குழு இரா. ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.