N

24.3.11

கடையநல்லூர் SDPI வேட்பாளர் முபாரக் வேட்புமனு தாக்கல்!!

 மார்ச் 22,: முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. தனித்து போட்டியிட முடிவெடுத்தது.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி.அதன் அடிபடையில்

எஸ் டி பி ஐ யின் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என் முடிவு எடுக்கபட்டது அதன் அடிபடையில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஆறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆறு தொகுதில் ஒரு தொகுதியான நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஜங்ஷன் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த போது அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப் பட்டால் கடையநல்லூரில் நீண்ட நாளாக தீர்க்கபடாமல் இருக்கும் தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைப்பேன் ,கடையநல்லுரை வேலை வாய்ப்பு மிக்க நகரமாக மாற்றுவேன், பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு முயற்சி எடுப்பேன் மேலும் தொகுதி மக்களின் தோளோடு தோளாக நின்று அவர்களின் எந்த பிரச்சனை என்றாலும் உடனடியாக தீர்த்து வைப்பேன் என கூறினார்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.