N

30.12.11

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 திடீர் வீழ்ச்சி!!!


தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ 400 வரை ஒரே நாளில் குறைந்து விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவந்தது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.20,680-க்கும், ஒரு கிராம் ரூ.2,585 விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.20,280 ஆகவும், ஒரு கிராம் ரூ.2,535 ஆகவும் குறைந்தது. அதாவது நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.400 குறைந்ததது, நகை வாங்க வந்தவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

அதே நேரம் புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை சீஸன் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டதால், இந்த விலைக் குறைவு தற்காலிகமானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.