உலக சனத்தொகையில் 1.6 பில்லயின் பேர் முஸ்லிம்களாவர். உலக சனத்தொகையில் 5 பேரில் ஒருவர் முஸ்லிமாவார். சர்வதேச மட்டத்தில் மிக வேகமாக வளரும் மார்க்கம் இஸலாம் என்று கடைசியாக மேற்கொள்ளப்ட்ட சுயாதீன ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை எவராலும் மறைக்க முடியாது. சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற துறைசார் இஸ்லாமிய பிரபலங்கள் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உட்பட 14 துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது. ஜோர்தான் ஹாசிமீய்ய ராஜ்யத்தின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிடுகிறது. முஸ்லிம் உலகம் முதல் 50 பிரபலங்களின் விபரங்களை தொகுத்துத் தருகிறது.
1.அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அல்-ஸவ்த்
நாடு : சவூதிஅரேபியா
துறை : அரசியல்
பிறப்பு : 1923 ஓகஸ்ட் 1(88வயது)
சிந்தனைப்பிரிவு : ஸலபி
26மில்லியன் சவூதிஅரேபியா மக்களின் மன்னர்.இவரது அரசாங்கத்தின் வழங்கியுள்ள புலமைப்பரிசில்களினால் 70,000 சவூதி அரேபிய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்விகற்கிறார்கள்.
2. மன்னர் 6ஆம் முஹம்மத்
நாடு: மொரோக்கோ
துறை : அரசியல்,நிர்வாகம்,அபிவிருத்தி
பிறப்பு: 1963 ஓகஸ்ட் 21 (48வயது)
சிந்தனைப்பிரிவு : மாலிக்கி மத்ஹப்
32மில்லியன் மொரோக்கோ மக்களின் மன்னர்.வட ஆபிரிக்காவில் ஏற்பட்ட புரட்சி வெற்றிகரமான முறையில் கையாண்ட பெருமை மன்னர் 6ஆம் முஹம்மத்தைச் சாரும்.
3. ரிசப் தையிப் எர்தோகன்
நாடு: துருக்கி
துறை : அரசியல்,
பிறப்பு : 1954 பெப்ரவரி 24 (57வயது)
75.7 மில்லியன் துருக்கிய மக்களின் பிரதமர். நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்த எர்தோகன் நடவடிக்கை எடுத்தார்.
4 .மன்னர் அப்துல்லாஹ் II அல் ஹூசைன்
நாடு: ஜோர்தான்
துறை : அரசியல்
பிறப்பு : 1962 ஜனவரி 30 (49வயது)
6.4 மில்லியன் ஜோர்தான் குடிமக்களின் மன்னர். சர்வதேச மட்டத்தில் முஸ்லிங்களுக்கும் கிறிஸ்தவர்க்குமிடையிலான உறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
5 .ஆயதுல்லாஹ் ஸையித் அலி கமய்னி
நாடு: ஈரான்
துறை : அரசியல், நிர்வாகம்
பிறப்பு : 1939 ஜூலை 17(72வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ - இஸ்னா அஷரி
ஈரான் இஸ்லாமியக்குடியரசின் ஆன்மீகத்தலைவர். 75 மில்லியன் ஈரானியர்களுக்கு தலைமை தாங்குகிறார் வட ஆபிரிக்கப் புரட்சியைஇஸ்லாமிய எழுச்சி என்று வர்ணித்தவர்.
“நாங்கள் அணுஆயுதத்தை தயாரிக்க எதிர்பார்பதில்லை என்பதை மேற்கு உலகம் நன்கு அறிந்துள்ளது. அணுஆயுதம் எமது பொருளாதார,அரசியல் நலன்கள் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை என்பனவற்றிக்கு முரணானது”. - ஆயதுல்லாஹ் ஸையித் அலி கமய்னி
6.ஹம்மாத் பின் கலீபா அல் தானி
நாடு : கட்டார்
துறை : அரசியல், நிர்வாகம்
பிறப்பு : 1952 ஜனவரி 1(59வயது)
1.5 மில்லியன் கட்டார் மக்களின் தலைவர், அல் ஜஸீராஊடகவலையமைப்பின் ஸ்தாபகப் பங்குதாரர்களில் ஒருவர். அரேபியப் புரட்சிக்கு பகிரங்கமாக ஒத்துழைப்பு வழங்கினார். அல்ஜஸீரா ஊடக வலையமைப்பையும் கலீபா தானி புரட்சிக்காக பயன்படுத்தினார்.
7.பேராசிரியர்,கலாநிதி செய்க் அஹமத் முஹம்மத் அல் தையிப்
நாடு : எகிப்து
துறை : நிர்வாகம்
பிறப்பு : 1946(65வயது)
உலக முஸ்லிம்களின் கௌரவத்திற்கு பாத்திரமான “செய்ஹூல் அஸ்ஹர்”என்ற பதவியை வகிக்கிறார். சமகால முஸ்லிம் உலகில் மதிப்பிற்குரிய அறிஞராவார். 4இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பதவிவகிக்கிறார்.
8. கலாநிதி முஹம்மத் பாதி
நாடு : எகிப்து
துறை : நிர்வாகம்,அரசியல்,
சர்வதேச இஸ்லாமிவலையமைப்பு
பிறப்பு: 1943 ஆகஸ்ட் 7 (65வயது)
சிந்தனைப்பிரிவு : இஸ்லாமிய சகோதரத்துவம்
மத்திய கிழக்கை ஆட்டிப்படைத்து அரபுப் புரட்சிக்கு உரமூட்டி வரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர்.ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட முறுகல்நிலையினால் பல முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
9. சுல்தான் கபூஸ் பின் ஸைத் அல் ஸைத்
நாடு : ஓமான்
துறை : அரசியல்,அபிவிருத்தி
பிறப்பு : 1940 நவம்பர் 18 (70வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ- இபாழி
2.9 மில்லியன் ஓமானியர்களின் தலைவர். 40 வருடங்களாக ஓமானின் சுல்தானாக பதவிவகிக்கிறார். மத்திய கிழக்கில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த அரச குடும்பம் ஒமான் சுல்தான் குடும்பமாகும்
10. ஆயதுல்லாஹ் செய்யத் அலி ஹூசைன் சிஸ்தானி
நாடு : ஈராக்
துறை : கல்வி
பிறப்பு : 1930 ஆகஸட் 04 (70வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ - இஸ்னா அஷரி
ஈராக்கின் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் ஆன்மீகத்தலைவர், ஈரானைச் சோந்த 50 ஆயிரம் மாணவர்களின ஆதரவு இவருக்கு உண்டு. இவரின் ஆறு புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
11 .சுசிலோ பம்பங் யாதூயோனோ
நாடு : இந்தோனேசியா
துறை : அரசியல், அபிவிருத்த
பிறப்பு : 1949 செப்டம்பர் 09 (70வயது)
உலகில் கூடுதான முஸ்லிம்கள் வசிக்கும் இந்தோனேசிய மக்களின் ஜனாதிபதி. சராசரி மக்கள் தொகை235.5 மில்லியன். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இவர் சர்வதேச மட்டத்தில் பாரட்டுக்களை பெற்றுவருகிறார்.
12. கலாநிதி செய்க் அலி ஜும்ஆ முஹம்மத்
நாடு : எகிப்து
துறை : கல்வி, அரசியல்,
பிறப்பு : 1953 மார்ச் 03 (58வயது)
80 மில்லியன் எகிப்திய மக்களின் தலைமை முப்தியாக விளங்குகிறார். அனைத்து கொள்கைகளைப் பின்பற்றுவர்களாலும் கௌரவமாக மதிக்கப்படுகிறார். 2003ம் ஆண்டு முதல் தலைமை முப்தியாக பணியாற்றுகிறார். கலாநிதி ஜூம்ஆவின் பிரத்தியேக நூல்நிலையம் 30ஆயிரம் புத்தகங்களைக் கொண்டதாகும். சமகால பிரச்சினைகளுக்கு பத்வா வழங்கும் தார் அல் இப்தா அல் மஸ்ரியாவின் தலைவராகவும் இவர் பணியாற்றுகிறார். தாருல் இப்தா வாராந்தம் 5ஆயிரம் பத்வாக்களைவழங்குவதோடு, 2010ம் ஆண்டில் தார் அல் இப்தா அல் மஸ்ரியா 4லட்சத்து அறுபத்து ஐயாயிரம் பத்வாக்களை வெளியிட்டமை சிறப்பம்சமாகும்.
13. கலாநிதி செய்க் யூசுப் அல் கர்ளாவி
நாடு : கட்டார்.
துறை : கல்வி
பிறப்பு : 1926 செப்டம்பா 09 (85வயது)
சிந்தனைப்பிரிவு : முஸ்லிம் ககோதரத்துவம் - ஸலபி
உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமை அறிஞர். அல் ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இஸ்லாமிய சட்டமும் வாழ்வும்என்ற இவரது நிகழச்சியை 40மில்லியன்பேர்பார்வ்வையிடுகிறார்கள்.கர்ளாவி அவர்கள் பஹ்ரைனைத்தவிரந்த அரபுநாடுகளின் புரட்சிக்கு ஆதரவு வழங்கினார்.இவர் லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியை சுட்டுக்கொல்லுமாறு லிபிய இராணுவத்துக்கு அழைப்புவிடுத்து பத்வா வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14. செய்க் அப்துல் அஸீஸ் ஆல் அல் செய்க்
நாடு : . சவூதிஅரேபியா
துறை : கல்வி,நிர்வாகம்
பிறப்பு : 1941 (70வயது)
சிந்தனைப்பிரிவு: ஸலபி
26.2மில்லியன் சவூதிமக்களின் தலைமை முப்தியாக விளங்குகிறார். சர்வதேச ஸலபி வலையமைப்பின் தலைவராவர்.தனது 20ஆவது வயதில் கண்பார்வையை இழந்தவராவார்.
அரபுப்புரட்சிக்கு அமைவாக சவூதிஅரேபியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இவர் கடுமையான முறையில் எதிர்ப்பை வெளியிட்டார்சவூதி அரேபியா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது தடுக்கப்பட்டது என பத்வா வழங்கினார்.
15. ஹோட்ஜா எபின்தி பத்ஹூல்லாஹ் குலான்
நாடு : துருக்கி
துறை : கல்வி
பிறப்பு : 1941 ஏப்ரல 27 (70வயது)
உலகின் முன்ணணி இஸ்லாமிய பிரசாகரர்.துருக்கி மற்றும் உலகலாவியரீதியில் சமூகதலைமைத்துவத்தை வழங்கிவருகிறார்.ஏழு இலட்சம்பேர் வாசிக்கும் ஸிஸின்தி என்ற மாதந்த சஞ்சிகையின் தலைமை ஆசரியர்.இவர் 82க்கும் அதிகமான புத்தகஙகளை எழுதியுள்ளார்.
16.அமீர் ஹாஜி முஹம்மத் அப்துல் வஹ்ஹாப்.
நாடு: பாகிஸ்தான்
துறை : கல்வி,சர்வதேச இஸ்லாமிய வலையமைப்பு,
நிர்வாகம்
பிறப்பு : 1923 (88வயது)
சிந்தனைப்பிரிவு : சுன்னி- தேவ்பந்தி
120நாடுகளில் இயங்கும் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவராவார் பங்களாதேஷில் இடம்பெறும் தப்லீக் ஜமாத்தின் வருடாந்த மகாநாட்டில் 30இலட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
17. கலாநிதி ஸைத் ஆகில் ஸிராஜி
நாடு : இந்தோனேசியா
துறை : கல்வி,அரசியல் ,நிர்வாகம்
பிறப்பு : 1953 ஜூலை 3(58வயது)
கலாநிதி ஸைத் ஆகில் இந்தோனேசியாவின் சுயாதீன முஸ்லிம் அமைப்பாக விளங்கும் உலகப்புகழ்பெற்ற நத்ஹதுல் உலாமாவின் தலைவராவார்.5வருட தலைமைத்துவத்துக்காக 2010ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டார். இலட்சக்கணக்கானவர்கள் இவ் அமைப்பினால் நன்மை பெற்று வருகிறார்கள்.இந்தோனேசியாவில் 6,830 பாடசாலைகளும் 44 பல்கலைக்கழகங்களும் நத்ஹதுல் உலமாவின் கீழ் இயங்குகின்றன.
18. முஹம்மத் பின் ஸைத் அல் நஹ்யான்
நாடு : ஐக்கிய அரபு ராச்சியம்
துறை : அரசியல்,நிர்வாகம்,அபிவிருத்தி,இராணுவம்
பிறப்பு : 1961 ஒக்டோபர் 3 (50வயது)
சிந்தனைப்பிரிவு : சுன்னி
அபூதாபியின் முடிக்குரிய இளவரசர். ஐக்கிய அரபு இராச்சிய இராணுவத்தின் உயர்நிலைப் பிரதி கட்டளைத் தளபதி. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடுத்த ஜனாதிபதியாக பதிவியேற்கவுள்ளார்.
19. கலாநிதி செய்க் ஸல்மான் அல் அவ்தா
நாடு : சவூதிஅரேபிய
துறை : கல்வி,ஊடகம்
பிறப்பு : 1955 (56வயது)
சிந்தனைப்பிரிவு : ஸலபி
இவர் 53புத்தகங்களை எழுதியுள்ளளர். Islamtoday.net இணையதளத்தின் ஸ்தாபகர் . பேஸபுக் இணையதளத்திவ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸல்மான் அவ்தாவின் Facebook பக்கத்தை 559,708 பேர் பின் தொடர்கின்றனர். 53 புத்தகங்களை எழுதியுள்ளார்.
20. பேராசிரியர்,கலாநிதி செய்க் ஸஈத் ரமழான் அல் பூத்தி
நாடு : சிரியா
துறை : கல்வி
பிறப்பு : 1929 (82வயது)
முஸ்லிம் உலகில் கௌரவத்திற்குப் பாத்திரமான அறிஞர். டமஸ்கஸ் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டக்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதியாவார். தற்போது டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கலாநிதி பூத்தி 60 புத்தகங்களை எழுதியுள்ளதுடன்,இவரது கயஉநடிழழம பக்கத்தை 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்கின்றனர்.
21. கலாநிதி அம்ர் காலித்
நாடு : எகிப்து
துறை: ஊடகம்
பிறப்பு : 1967 செப்டம்பர் 5( 44வயது)
இஸ்லாமிய உலகில் கூடுதல் செல்வாக்குள்ள அறிஞராவார். அரபு உலகில்,இளைஞர்,யுவதிகளால் கூடுதலாக விரும்பப்படும் பேச்சாளர். உலகின் கூடுதல் செல்வாக்குள்ள தொலைக்காட்சி பிரசாhரகர்களில் ஒருவர் என நியூ யோர்க் டைம்ஸ் சஞ்சிகையால் தெரிவு செய்ததோடு TIMEசஞ்சிகை 2007ம் ஆண்டில் இவரை உலகின் கூடுதல் செல்வாக்குள்ள நபர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுத்தது. அம்ர் காலித் Facebook பக்கத்தை 3.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். தஹ்ரீர் சதுக்கத்தில் இவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டார்.
22 . சாஹ் கீரீம் அல் ஹூசைனி
நாடு : பிரான்ஸ்
துறை: நிர்வாகம்
பிறப்பு : 1937 டிசம்பர் 13( 75வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ - இஸ்மாயிலி
50 லடசம் நிஸாரி இஸ்மாயிலி பிரிவவின் தலைவராவார்.
இவருக்குச் சொந்தமான Aga Khan அபிவிருத்தி வலையமைப்பில் ஏழுலட்சம் பேர் தொழில்புரிகின்றனர்.
23 . செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ்.
நாடு : லெபனான்
துறை: நிர்வாகம்,அபிவிருத்தி
பிறப்பு: 1960 ஆகஸ்ட் 31(51வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ - இஸ்னா அஷரி
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் செயலாளர் நாயகமாவார். ஹஸன் நஸ்ரல்லாஹ் மத்திய கிழக்கில் வலுவான நபராகக் காணப்படுகிறார். அரபுப்புரட்சிக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிவருகிறார். எனினும் அவர் சிரியாவில் பஷர் அல் அஸாத்தின் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவருகிறார்.
24 . செய்க்கா முனீரா குபைஸி
நாடு: சிரியா
துறை : கல்வி
பிறப்பு : 1939 31(51வயது)
செய்க்கா முனீரா குபைஸி முஸ்லிம் உலகில் செல்வாக்கு மிக்க பெண் அறிஞராவார். குபைஸி அமைப்பின் தலைவராகவும் விளங்குகிறார். குபைஸி அமைப்பு மகளிருக்காக மாத்திரம் அமைக்கப்பட்டதாகும். டமஸ்கஸ் நகரில் குபைஸிக்கு சொந்தமான 80 பாடசாலைகள் உள்ளதோடு, 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
25 . அமீருல் முஃமினீன் செய்க் அல்சுல்தான் முஹம்மது சஅது அபூபக்கர்III
நாடு: நைஜீரியா
துறை : நிர்வாகம்
பிறப்பு : 1956 ஆகஸ்ட் 24 (55வயது)
சிந்தனைப்பிரிவு : மாலிகி மத்ஹப் – காதிரிய்யா தரீக்கா
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் செகோடோ பகுதியின் 20வது சுல்தான் ஆவார்.75.7 மில்லியன் நைஜீரிய முஸ்லிம்களின் ஆன்மீக தலைவராவார். நைஜரீயாவின் சனத்தொகையில் அரைவாசிப்பேர் முஸ்லிம்ங்களாவர். முஸ்லிம்களுக்கும் - கிறிஸ்தவர்களுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த இவர் பாரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
26 . செய்க் அஹமத் திஜானி அலி ஸிஸ்ஸி
நாடு : செனகல்
துறை : கல்வி
பிறப்பு : 1955 (56வயது)
சிந்தனைப்பிரிவு : திஜானிய்யா தரீக்கா
திஜானிய்யாத் தரீக்காவின் ஆன்மீகத் தலைவராவார். மேற்கு ஆபிரிக்காவின் மிகப்பெரிய சூபி தரீக்கா அமைப்பாகும். திஜானிய்யா தரீக்காவைப் பின்பற்றும் 100மில்லியன் மக்களை செய்க் திஜானி வழிநடத்துகிறார்.
27 . அப்துல்லாஹ் குல்
நாடு : துருக்கி
துறை : அரசியல்
பிறப்பு: 1950 ஒக்டோபர் 29 (61வயது)
சிந்தனைப்பிரிவு : நக்ஷபந்தி தரீக்கா
அப்துல்லாஹ் குல் துருக்கிக் குடியரசின் 11வது ஜனாதிபதியாவார். 75.7 மில்லியன் துருக்கி மக்களின் ஜனாதிபதி. ஆர்மேனியாவுக்கு விஜயம் செய்த துருக்கியின் முதலாவது அரசதலைவர்.
28 . முப்தி முஹம்மத் அக்தர் ராஸா கான் காதிரி
நாடு : இந்தியா
துறை : கல்வி,நிர்வாகம்
பிறப்பு : 1943 நவம்பர் 23 (68வயது)
சிந்தனைப்பிரிவு: ஹனபி மத்ஹப் - சூபி
முப்தி முஹம்மத் அக்தர் கான் இந்திய பரேலவி அமைப்பின் தலைவராவார்.2 மில்லியன் மக்களின் ஆன்மீகத்தலைவர். 2006ம் ஆண்டில் இவர் இந்தியாவின்பிரதம முஸ்லிம் நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
29 . ஹாஜி ஹசன் அல் பல்கிய்யா
நாடு: புருணை தாருஸ்ஸலாம்
துறை : அரசியல்,நிதி
பிறப்பு : 1946 ஜுலை 15 (65வயது)
சிந்தனைப்பிரிவு: ஷாபிஈ மத்ஹப்
உலகின் கோடிஸ்வரர்களுள் ஒருவர். 4லட்சம் புருணை மக்களின் தலைவராவார். புருணையின் 5வது சுல்தான் ஆவார்.
30 . முஹம்த் பின் முஹம்மத் அல் மன்ஸூர்
நாடு : யெமன்
துறை : கல்வி
பிறப்பு : 1917 (94வயது)
சிந்தனைப்பிரிவு : ஷீஆ- ஸைதி
யெமன் நாட்டின் பத்து மில்லியன் ஸைதி மக்களின் ஆன்மீகத்தவைராவார். சவுதி அரேபியாவின் சனத்தொகையில் 3 சதவீதமானோர்.ஸைதிகளாவர்.
31 . பேராசிரியர்,கலாநிதி அப்துல்லாஹ் பின் பைய்யாஹ்
நாடு : முர்தானியா
துறை : கல்வி
பிறப்பு : 1935 (76வயது)
சிந்தனைப்பிரிவு : சுன்னி – மாலிக்கி மத்ஹப்
21ம்நூற்றாண்டின் தலைசிறந்த நீதிதிதுறை அறிஞராவார். முர்தானியாவின் உப ஜனாதிபதியாகவும்,பிரதமநீதியரசராகவும் பணியாற்றினார். சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் உப-தலைவராகப் பதவி வகிக்கிறார்.மேற்குநாடுகளில் வாசிக்கும் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருவதோடு, மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக் கடமையாற்றுகிறார்.
32 . நீதியரசர் செய்க் தக்கி உஸ்மானி
நாடு : பாகிஸ்தான்
துறை : கல்வி
பிறப்பு: 1943 (68வயது)
சிந்தனைப்பிரிவு : தேவ்பந்தி
பாகிஸ்தானை சோந்த தகி உஸ்மானி பிரபலமான நீதித்துறை அறிஞராவார். இதேவேளை இவர் இஸ்லாமிய நிதித்துறை நிபுணராவார். 2010ம் ஆண்டில் இடம் பெற்ற சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றினார்.
33. கலாநிதி ஆஇத் அல் கர்னி
நாடு : சவுதி அரேபியா
துறை : கல்வி
பிறப்பு : 1960 (51வயது)
சிந்தனைப்பிரிவு : ஸலபி
கலாநிதி ஆஇத் அல் கர்னி சவுதி அரேபியவின் பிரபலமான அறிஞராவார்.அத்துடன் பிரசாரகராகவும், எழுத்தாளராகவும் விளங்குகிறார். கலாநதி கர்னி எழுதிய கவலைப்பட வேண்டாம் என்ற புத்தகம் புகழ்பெற்றதாகும். 2மில்லியன் புத்தகப் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
34 .ராணிய்யா அல் அப்துல்லாஹ்
நாடு : ஜோர்தான்
துறை : அரசியல்,கல்வி,ஊடகம்,பெண்கள் பிரச்சினை
பிறப்பு: 1970 ஆகஸ்ட் 31 (41வயது)
ஜோர்தானிய ஹாசிமிய்யாக்குடியரசின் ராணி. மன்னர் அப்துல்லாஹ்வின் மனைவி. ஜோர்தானில் புரட்சிகரமான கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.
35 . செய்க் முஹம்மத் அலி அல் சபூனி
நாடு : சிரியா
துறை : கல்வி
பிறப்பு : 1930 ஜனவரி 01 (81வயது)
சிந்தனைப்பிரிவு : ஹனபி மத்ஹப்
தப்ஸீர் துறை அறிஞர். சிரியப் புரட்சியின் போது இவர் இராணுவத்திற்கு வழங்கிய பத்வா பின்வருமாறு “ இராணுவத்தினர் தமது உடன்பிறந்தோருடன் போராடுவது தடைசெய்யப்பட்டுள்ளது”
36.மஹ்மூத் அப்பாஸ்
நாடு: பலஸ்தீன்
துறை : அரசியல்
பிறப்பு : 1935 மார்ச் 26 (76வயது)
பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி பதாஹ் அமைப்பின் இணை-ஸ்தாபகர். பலஸ்தன விடுதலை அமைப்பின் தலைவர்.ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடகாக பலஸ்தீனை இணைக்க இவர் மேற்கொண்ட பகீரதப்பிரயத்தனம் தோல்வியடைந்தாலும், யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனை இணைத்துக் கொள்வதற்கான இவரது முயற்சி வெற்றியளித்தது.
37. ஹபீப் உமர் பின் ஹபீஸ்
நாடு : யெமன்
துறை : கல்வி
பிறப்பு : 1962 (49வயது)
சிந்தனைப்பிரிவு : ஷாபிஈ மத்ஹப் - பாஅலவி தரீக்கா
சமகால உலகில் வாழும் தலைசிறந்த அறிஞராவார். பேராசிரியர் அலவி அல் மாலிகி அவர்களுக்கு வாழும் தலைசிறந்த அறிஞராக இவரைக்கருத முடியும். ஹழரமவுத் தார் அல் முஸ்பா கற்கை நிறுவகத்தின் ஸ்தாபகர். மேற்குநாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் இவர் விரிவுரைகளை நிகழ்தியுள்ளார். யெமன் புரட்சியின் போது அவரது கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது.
“ இறைவனின் தூதரின் வழியில் அனைவரையும் அறிஞர்கள் வழிநடத்த வேண்டும். முஸ்லிம்கள் இரத்தம் சிந்த அனுமதிக்கக்கூடாது. நீ ஓரு ஆட்சியாளனாகவோ குடிமகனாகவோ இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை காயப்படுத்தவற்கு,கொலைசெய்வதற்கு அனுமதியளிப்பது தடை
செய்யப்பட்டதாகும்” -ஹபீப் உமர்
38 . செய்க்கா மூஸா பிந்த் நாஸர் அல் மிஸ்னத்
நாடு: கட்டார்.
துறை : ஊடகம், அரசியல்,பெண்கள்பிரச்சினை
பிறப்பு: 1959 ஆகஸ்ட் 08 (52வயது)
சிந்தனைப்பிரிவு: ஸலபி
கட்டார் அமீரின் மனைவி.பெண்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விரிவாக கவனம் செலுத்திவருகிறார்.2003ம் ஆண்டில் கல்விக்கான தூதுவராக யுனெஸ்கோ அமைப்பினால் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்ணணி பல்கலைக்கழகங்களின் பாடநெறிகள் மற்றும் நிகழ்சிகளை கட்டார் பல்கலைக்கழகங்களில் ஆரம்பித்தார்.
39 . காலித் மஷ்அல்
நாடு : பலஸ்தீன்
துறை : அரசியல்
பிறப்பு : 1956 (55வயது)
சிந்தனைப்பிரிவு : முஸ்லிம் சகோதரத்துவம்.
ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகர் செய்க் அஹமத் யாஸீன் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் அவரது இடத்திற்கு மஷ்அல் நியமிக்கப்பட்டார். ஹமாஸ் அமைப்பின் சிரிய பணியத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
40 .பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் சம்ஸூத்தீன்
நாடு : இந்தோனேசியா
துறை : கல்வி,நிர்வாகம்,அபிவிருத்தி
பிறப்பு : 1958 ஆகஸ்ட் 31 (53வயது)
இந்தோனேசியாவின் மிகப்பெரிய அமைப்பான முஹம்மதிய்யாவின் தலைவராவார். இந்தோனேசிய உலமா பேரவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
41 .மௌலானா மஹ்மூத் மதனி
நாடு : இந்தியா
துறை : கல்வி,அரசியல்,நிர்வாகம்
பிறப்பு : 1956 மார்ச் 3 (47வயது)
சிந்தனைப்பிரிவு: தேவ்பந்தி
மௌலானா மஹ்மூத் மதனி இந்தியாவின் முன்ணணி அரசியல்வாதியாவார். ஜம்இயத் உலமா ஏ ஹிந்த் அமைப்பின் தலைவர். 10 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் ஜம்இயத் உலமா ஏ ஹிந்த் அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
42 .ஹபீப் அலி ஸைன் அல் ஆப்தீன் அல் ஜிப்ரி
நாடு : ஐக்கிய அரபு ராச்சியம
துறை : கல்வி
பிறப்பு : 1971 ஏப்ரல் 16 (40வயது)
சிந்தனைப்பிரிவு: அஷ்அரி -ஷாபிஈ மத்ஹப்- பாஅலவி தரீக்கா
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவாகளின் தலைமுறையைச்சோந்ந்த அஹ்லுல் பைத் குடும்பத்தில் பிறந்ததவர் . முஸ்லிம் உலகில் புகழ்பெற்ற பேச்சாளராகவும்,மதப்பிரசாரகராகவும் விளங்குகிறார். கற்கைக்கும் ஆய்வுக்குமான தாபா மன்றத்தின் செயலாளர் நாயகமாக பதவிவகிக்ப்பதோடு, இஸ்லாமிய கற்கைகளுக்கான ஜோர்தானிய அரச அஹ்ல் அல்பைத் நிறுவகத்தின் சபை உறுப்பினராக பணியாற்றுகிறார்.
43. செய்க் ஹம்ஸா யூசுப்
நாடு: ஐக்கியஅமெரிக்க குடியரசு
துறை : கல்வி
பிறப்பு : 1960 (51வயது)
சிந்தனைப்பிரிவு : அஷ்அரி -மாலிகி மத்ஹப்
மேற்கு உலக முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் செய்க் ஹம்ஸா யூசுப் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.அமெரிக்காவின் முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனமான ஸைதுனா கல்லூரியை ஆரம்பித் பெருமை செய்க் ஹம்ஸ்வை சாரும். 1977ம் ஆண்டு தனது 17 வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பேராசிரியர் அப்துல்லாஹ் பின் பையா உட்பட முன்ணணி அறிஞர்களிடம் கல்வி கற்றார்.சர்வதேச மாநாடுகளில் விஷேட பேச்சாளராவும் கலந்துகொண்டார்.
“புரட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் பிரச்சினைகளுக்கு இறுதிதத்தீர்வாக அமையாது. வீடுகளில் இருந்தே மாற்றங்கள் உருவாக வேண்டும். அரசியல் அமைப்புக்கு உட்பட் முடியாட்சியை வரவேற்கும் செய்க் ஹம்ஸா இதற்கு உதாரணமாக மெரோக்கோவை சுட்டிக்காட்டுகிறார்." -
ஹம்ஸா யூசுப்
44. செய்க் பேராசிரியர் கலாநிதி முஸ்தபா செரிச்
நாடு : பொஸ்னியா
துறை: கல்வி,அரசியல்
பிறப்பு: 1952 (59வயது)
ஐரோப்பிய முஸ்லிம்களின ஒளிவிளக்காக செயற்பட்டுவரும் கலாநிதி முஸ்தபா பொஸ்னியாவின் தலைமை முப்தியாவார். ஐரோப்பிய முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் கூடுதலாக கவனம் செலுத்துவதோடு கலாசரங்களுக்கிடையிலான உறவுகளிலும் கவனம் செலுத்திவருகிறார்
“ஒவ்வொரு முஸ்லிம் அறிஞரும் அரசியல்வாதியாக மாறவேண்டும் ஏனெனில் அரசியல் ரீதியாக முஸ்லிம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான இது வழிவகுக்கும் ." - கலாநிதி முஸ்பா செரிச் - Riz Khan - Al Jazeera English
45.பேராசிரியர் கலாநிதி எக்மலித்தீன் இஹ்ஸான்ஒக்லு
நாடு: துருக்கி
துறை: நிர்வாகம்,அரசியல்
பிறப்பு : 1943 டிசம்பர் 26 (68வயது)
இஸ்லாமிய மகாநாட்டு அமையத்தின் (OIC) பொதுச்செயலாளராக இஹ்ஸான்ஒக்லு பதவி வகிக்கின்றார். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பாகவும்,ஐக்கியநாடுகள் சபைக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பொதுஅமைப்பபாகவும் இஸ்லாமிய மகாநாட்டு அமையம் (OIC) காணப்படுகின்றது.
46. கலாநிதி சைய்யிதினா முஹம்மத் புர்ஹானுத்தீன் ஸாஹிப்
நாடு : இந்தியா
துறை : நிர்வாகம்
பிறப்பு: 1915மார்ச் (96வயது)
சிந்தனைப்பிரிவு: ஷீஆஇஸ்மாயீல், தாவூதி போரா( Bhora)
உலகில் வாழும் பத்து இலட்சம் தாவூதி போராக்களின் (Bhora) தலைவர்.
47.பேராசிரியர் கலாநிதி சைய்யித் ஹூஸைன் நாஸர்
நாடு : அமெரிக்கா
துறை: கல்வி
பிறப்பு : 1933 ஏப்ரல் 13 (78வயது)
சிந்தனைப்பிரிவு : ஷிஆ
அமெரிக்காவின் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத்துறை பேராசிரியராக கலாநிதி நாஸர் கடமையாற்றுகின்றார்.வாழும் மெய்யியலாளர்களுக்கு மத்தியில் ஒரே முஸ்லிம் மெய்யியலாளர் என்ற பெருமை கலாநிதி நாஸரைச் சாரும். 50க்கும அதிகமான புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
48. செய்க் நாஸிம் ஆதில் அல்ஹக்கானி அல் கிப்ரீசி
நாடு: சைப்ரஸ்
துறை : கல்வி
பிறப்பு : 1922 ஏப்ரல் 25 (89வயது)
சிந்தனைப்பிரிவு சுன்னி: நக்ஷபந்தி தரீக்கா
நக்ஷபந்தி தரீக்காவின் ஆன்மீகத்தலைவராவர். நக்ஷபந்தி தரீக்கா உலகின் பல பாகங்களிலும் பின்பற்றப்படுகிறது.
49 .கலாநிதி அப்துல் அஸீஸ் பின் உத்மான் அத்தவ்ரிஜி
நாடு : சவுதி அரேபியா
துறை : நிர்வாகம் ,அபிவிருத்தி
பிறப்பு : 1950 ஏப்ரல் 03 (61வயது)
இஸ்லாமிய கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (ISESCO) செயலாளர் நாயகமாவார். உறுப்பு நாடுகளில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். முஸ்லிம் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த எதிர்பார்பதாக கூறும் கலாநிதி அஸீல் பயங்கரவாத நடடிவடிக்கைகளை வன்மையாக கண்டித்துவருகிறார்.
50. கலாநிதி அலி நயித்
நாடு : லிபியா
துறை : கல்வி,அரசியல் ,இராஜதந்திரம்
பிறப்பு : 1962 (49வயது)
கலாநிதி நயித் லிபியாவின் அரசியல்செயற்பாட்டாளராகவும், கல்விமானாகவும் விளங்குகிறார். தேசிய நிலைமாற்றுப் பேரவை அரசாங்கத்தின் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய- கிறிஸ்தவ உறவு தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுத்துஎடுத்துவருவதோடு கலம் ஆய்வு மற்றும் ஊடக நிறுவகத்தின் ஸ்தாபக பணிப்பாளராகவும் பதவி வகிக்கிறார்.
“கடாபியின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்ததோடு, சுயாதீன உலமாக்களின் வலைமைப்பு என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார். கலாநிதி நயித் தேசிய நிலைமாற்றுப் பேரவை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட முதலாவது தூதுவராவார்”.
நன்றி:முஸ்லிம் உலகம்
நன்றி:முஸ்லிம் உலகம்
மாஷா அல்லாஹ்
ReplyDeleteZakir Nayak!!!!
ReplyDelete