N

24.12.11

அம்மை நோயை தடுக்கும் சூரிய ஒளி -ஆய்வில் தகவல்


சூரிய ஒளி உடலில் நன்றாக படும் நபர்களுக்கு அம்மை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. நன்றாக சூரிய ஒளிபடும் பகுதிகளில் மனிதர்களை அம்மை நோய் தாக்குவது குறைவு எனஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளியில் அடங்கியுள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் அம்மை நோய்க் கிருமிகளை அழிப்பதுதான் இதற்கு காரணம் என ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர்.ஃபில்ரைஸ் கூறுகிறார். சிக்கன் பாக்ஸ் என்று அழைக்கப்படும் அம்மை நோய் குளிர் காலங்களில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அம்மை நோய் பரவுவதற்கு காரணம் இதுவேயாகும் என அவர் கூறுகிறார்.
பல நாடுகளில் நடந்த 25 ஆய்வு அறிக்கைகளை விரிவாக பரிசோதித்து ஆராய்ச்சியாளர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர். மருத்துவ இதழானவை ரோலஜி பத்திரிகையில் இந்த புதிய கண்டுபிடிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.