கோவை:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் சார்பில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் 400 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாகன ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து உக்கடம், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று தமிழக எல்லையான கந்தேகவுண்டன் சாவடியில் தர்ணா நடத்த திட்டமிட்டிருந்தனர். வாகனப்பேரணி செல்ல நூற்றுக் கணக்கானோர் ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர்.
மாநகரக் காவல் துணை கமிஷ்னர்கள் ஹேமா கருணாகரன், செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வாகனப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். ஆத்துப்பாலம் அருகே தடையை ஏற்படுத்தினர்.
காவல்துறையினரின் தடையை மீறி பேரணிக்கு முயன்றபோது, தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக, மனிதநேய மக்கள் கட்சியினர் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.