N

30.12.11

முத்துபேட்டை ஜும்மா பள்ளியின் வரலாறு


முதன் முதலாக முத்துப்பேட்டை நகருக்கு சுமார் 400 வருடத்திற்கு முன்பு எந்த பெயரும் இல்லாமல் வெறும் பள்ளி வாசல் என்ற பெயரில் அடியெடுத்து வைத்தேன். நான் அடியெடுத்து வைத்த பகுதியான மரைக்காயர் தெருவில் பெருவாரியான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன் முதலில் என்னுடைய இடத்தில் குத்பா தொழுகையை நடத்தினார்கள். (இந்த ஊரில் முதல் குத்பா நடந்தது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் எனக்கு குத்பா பள்ளிவாசல் என்று எனக்கு பெயரிடப்பட்டது. பெயரில்லாமல் வந்த எனக்கு பெயரிட்டு கண்ணியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். 

இதனைத்தொடர்ந்து காளங்கள் நகர்ந்தன. என்னிடம் வந்து இறைவனை வணங்கிய எண்ணிலடங்கா மக்களை நான் அவ்வப்போது இழந்திருக்கிறேன்,இதனை எண்ணி நான் ரொம்பவும் வருந்துவதுண்டு. முன்னோர்கள் சென்றாலும் வரக்கூடிய காலங்களில் உள்ள மக்களை எண்ணி, என்னிடம் அதிக தொடர்பை ஏற்படுத்தக் கூடிய மக்களை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

ஆனால் மிக குறைவான மக்களே என்னிடம் வருகிறார்கள். ஏன் நான் ஒரு பழைய பள்ளிவாசல் என்ற பெயரிலா அல்லது என்னுடைய வருகை இவ்வூர் மக்களுக்கு பிடிக்க வில்லையா என்பது தெரியவில்லை.ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ், மற்றும் பெருநாள் தொழுகை ஆகிய தொழுகைக்கு மட்டும் என்னை கையில்பிடிக்க முடியாது. 


ஏனெனில் அன்று மட்டும் இவ்வளவு மக்கள் கூட்டம் என்னிடம் வந்து இறைவனை வணங்குவதை பார்த்தால் ஆனந்த கண்ணீர் வரும். ஆனால் சாதாரண 5 வேலை தொழுகையில் மிகவும் நான் கைசேதம் அடைந்தது போல் என் முகம் காட்சி தரும். இதனைக்கண்டு நான் அஞ்சுவதில்லை என்னிடம் வந்து இறைவனை வணங்க மிகப்பெரிய கூட்டம் வருங்காலங்களில் அதிகமாக என்னுடைய இடத்திற்கு வருகை தந்து என்னை சிறப்பிப்பார்கள் என்ற என்னத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கிறேன்.



.................................................................


குறிப்பு:


இந்த குத்பா பள்ளி திறப்பு விழாவினை முன்னிட்டு அனைத்து கட்சி நண்பர்களும், இஸ்லாமிய அனைத்து இயக்கத்தினரும் மற்றும் ஊர் பொது மக்களும் அவரவர் கட் அவுட் வைத்து வண்ணம் முத்துப்பேட்டை நகரை குதூகலமக்கிவருகிறது.

source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா,சுபைத் கான், மர்சூக் அஹமது,AKL . அப்துல் ரஹ்மான்
.................................................................

        



        

1 comments:

  1. அதிரை நண்பன்December 30, 2011 at 3:22 PM

    மாஷா அல்லாஹ்

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.