கெய்ரோ:இஸ்ரேலின் மிரட்டலுக்கு இடையே ஃபலஸ்தீனில் ஐக்கிய அரசை உருவாக்க ஹமாஸும், ஃபத்ஹும் சம்மதம் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி பிரமாணம் மேற்கொண்டு ஆட்சியில் அமரும் வகையில் அரசை உருவாக்க எகிப்து தலைநகரமான கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும், ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரு தலைவர்களும், ஃபலஸ்தீன் தேசிய பாராளுமன்ற சட்டமியற்றும் கவுன்சிலில் கலந்துகொள்ள ஒப்புதல் தெரிவித்தனர். ஐக்கிய அரசை உருவாக்குவதுடன் ஃபதஹிற்கு செல்வாக்கு உள்ள ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தை(பி.எல்.ஒ) புனரமைப்பதற்கான பரிசோதனை குழுவில் ஹமாஸின் பிரதிநிதிகளை சேர்க்கவும் இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால்,பி.எல்.ஓவில் சேருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹூம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே,ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய நடவடிக்கையின் மூலமாக ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு சமாதான பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அரசியல் இயக்கம் இல்லை எனவும், தீவிரவாத இயக்கம் எனவும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.