N

16.1.12

ஈரான் விஞ்ஞானியைக் கொன்றது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான் - ஈரான் குற்றச்சாட்டு


ஈரான் தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கு அருகே காரில் காந்தக் குண்டினைப் பொருத்தி அதை வெடிக்க வைத்ததில் அந்நாட்டின் அணு அறிவியல் அறிஞர் முஸ்தபா அஹ்மதி ரொஸான் கொல்லப்பட்டார். அதில் 2 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள் வந்த இருவரே அந்தக் குண்டினை வெடிக்கச் செய்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
     
கொல்லப்பட்ட அணு அறிவியலாளரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.


குண்டு வெடிப்பு மூலம் அணு அறிவியலாளர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியாக இஸ்ரேலும், அமெரிக்காவும் உள்ளது என்றும் ஈரானின் அணு செயற்திட்டத்திற்கு எதிராகவே இந்தச் செயலை அந்நாடுகள் செய்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலை சர்வதேச அணு அதிகாரசபை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தச் செயல் ஈரானிய அணு விஞ்ஞானிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


ஆனால் அமெரிக்கா இந்தக் கொலைக் குற்றச்சாட்டை வழமை போல் மறுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் எந்த ஆர்வத்தையும் அது இதுவரை வெளியிடவுமில்லை.


 இஸ்ரேல் என்ற நாட்டை பூகோள வரைபடத்திலிருந்து அழித்து விட்டு பலஸ்தீனை மீட்டெடுக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடாத்தி மத்திய கிழக்கில் தனக்கிருக்கும் தடையை அழிக்க உதவுமாறும் இஸ்ரேல் அடிக்கடி அமெரிக்காவை கோரி வருகின்றது.


இந்த அரசியல் பின்னணியில்தான் ஈரான் இதுவரை மூன்று அணு விஞ்ஞானிகளை இழந்திருக்கிறது.

ஈரானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதே போன்ற தாக்குதல்கள் மூலம் 3 அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதில் 2 பேர் அணு அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மத்திய கிழக்கில் தனக்கு நிகராக அணு விஞ்ஞான அறிவியல் துறையில் எழுந்து வரும் ஈரானை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி வைப்பதில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அண்மைய காலமாக கடும் போக்குகளைக் கடைப்பிடித்து வருகின்றன. பாரிய பொருளாதார தடைகளை ஈரான் மீது அவை திணித்து வருகின்றன.


மரபு ரீதியான போர் ஒன்றிற்கான ஆயத்தங்களுடன் பல பொருளாதார நெருக்குதல்கள் மூலம் நேரடியாக ஈரானோடு மோதி வரும் இந்தச் சக்திகள், அதே வேளை மறைமுக யுத்தமாக இத்தகைய பயங்கரவாத கொலைகளை  தனது ஏஜன்ட்களை வைத்து ஈரானில் நடாத்தி வருகின்றன.  இத்தகைய கொலைகள் அணு விஞ்ஞான துறையில் ஈடுபடும் அறிவியலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இந்தத் துறையில் ஈரானை பின்னடையச் செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.


அண்மையில் சர்வதேச அணு ஆற்றல் அதிகார சபை (IAEA) ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர்பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருப்பதாக மத்திய கிழக்கின் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (Center for Middle East Studies) பணிப்பாளர் ஹிஸாம் ஜஃபர் குற்றம் சாட்டியுள்ளார்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.