N

9.3.12

33 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நூற்பாலை உரிமையாளர்கள் கண்ணீர் !!

தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) தலை வர் தேவராஜன் கூறியதாவது: தமிழகத்தில் கோடைகால மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மின் வாரியம் புதிய மின் கட்டுப்பாடு திட்டத்தை கடந்த 27.2.2012 முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும் மின் வாரியம் 1.3.2012 தேதி முதல் உயர் மின்அழுத்த பயனீட்டாளர்களுக்கு வாரம் இரண்டு நாள் மின் விடுமுறையும், 40 சதவீத மின் தடையும், 4 மணி நேரம் மாலை உச்சநேர மின்உபயோகத்துக்கு தடையும் விதித்துள்ளது. 


இதை அனைத்து சாராரும் கடைபிடித்திருந்தும், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை செய்யப்படுகிறது.  நூற்பாலைகள் வாரத்தில் சுமார் 33 மணி நேரம் மட்டும்தான் மின்சாரத்தை உபயோகிக்க முடிகிறது. மின்வாரிய கணக்கீட்டின்படி அனைத்து பயனீட்டாளர்களுக்கும் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே மின்பற்றாக்குறை உள்ளது. ஆனால், நூற்பாலைகளுக்கு மட்டும் 80 சதவீதம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இது, எந்த வகையிலும் நியாயம் இல்லை. அபரிமித மின்வெட்டு காரணமாக ஆலைகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக, உயர் அழுத்த மின் பயனீட்டாளர்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  முதல்வர் இந்த அபாயகரமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு, நூற்பாலைகளையும், அதை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு தேவராஜன் கூறினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.