N

22.4.12

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தஞ்சையில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம்.


முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 22ம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.ஐ.ஏ.எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது.
இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து வாகன பேரணிகள், தெரு முனை பிரசாரங்கள், பாடல்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள் மூலம் விழயிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாநில செயலாளர் கூறினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.