N

12.5.12

அரசு வேலை விழிப்புணர்வு & வழிகாட்டி முகாம்!


கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா என்கிற தேசிய மாணவ இயக்கத்தின் சார்பில் அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் அதிரையில் நடைப்பெற உள்ளது.
அரசுத்துறையில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறந்தள்ளப்படுவது ஒருபுறம் இருக்க, துரதிஷ்டவசமாக இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் அரசு பணிகளுக்கு செல்வது குறித்து சிந்திப்பது கூட இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நமதூரை சார்ந்த படித்த இளைஞர்கள் சரியான விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லாததால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதும் இல்லை.
இதனை மாற்றும் நோக்குடன் தான் தேசியளவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விளைந்த மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் எதிர்வரும் 26.05.2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் “அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் நடைப்பெற உள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் – ன் ஒருங்கிணைப்பாளர் ரசுலுதீன் தலைமையில் நடைப்பெற இருக்கும் இம்முகாமை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி துவக்கி வைக்க உள்ளார்.
அரசு வேலை குறித்து பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வரும் திருச்சி M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் P.M. மன்சூர் அவர்களும், புதுச்சேரி அரசு கல்வி துறையின் இணை செயலாளர்          L. முஹம்மது மன்சூர் அவர்களும் கலந்துக் கொண்டு வழிகாட்ட உள்ளனர்.
பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் +2 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவு செய்ய கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீமை 95006 99858 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளவும். 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.