40-வயதுக்கு மேல் லேசான நெஞ்சுவலி வந்தாலும் இசிஜி எடுத்து உண்மையான மாரடைப்பை உணர்ந்து கொள்ளலாம். சாதாரண தசைவலி, வாய்வுப்பிடிப்புகள், வயிற்றுவலி போன்றவை கூட நெஞ்சில் வலியை ஏற்படுத்தும். எனவே 40-வயதுக்கு மேல் இசிஜி எடுத்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
இரத்தத்தில் கொழுப்புச்சக்தி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இரத்தக் குழாயை அடைக்கும் இரத்தம் உறைந்த கட்டிகள் வுலீசழஅடிரள உண்டாகாமல் காக்கலாம். மதிய உணவு தடபுடலாக சாப்பிட்டதும், உடனே படுத்து உறங்கககூடாது. அப்போது இரத்த ஓட்டம் மெதுவாகச் செல்லும். அதுவும் அந்த அடைக்கும் கட்டிகள் உண்டாகக் காரணமாகும்.
குளிர்காலத்தில் குளிர்ந்தநீரில் குளித்தலாகாது. குளிர் இரத்தக் குழாய்களைச் சுருங்கச்செய்யும். அதிக கோபம். அதிக துக்கம், அதிர்ச்சிகள் இவற்றால் இதயம் தாக்கப் படக்கூடாது. எதையும் தாங்கக்கூடிய சக்தி இதயத்திற்கு வேண்டும். புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் அறவே கூடாது.
இரும்பு சக்தி குறைதல், வைட்டமின் பி2, பி12, குறைதல், வைட்டமின் சி குறைதல், வயிற்றில் பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சுதல், இவையெல்லாம் இரத்த சோகைக்கு காரணங்கள். நல்ல காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பால், முட்டை, இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சோகை வராமல் தடுக்கலாம். சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு எளிதில் ஏற்படும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.