திருவனந்தபுரம்,
மத்திய ஆக்சிஜன் குழுமம், மாநிலங்களுக்கு இடையேயான ஆக்சிஜன் பகிர்தலைக் கண்காணித்து உறுதி செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சென்று சேர்வதை இந்தக் குழு உறுதி செய்கிறது. அதன்படி நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இருப்பு வைக்கப்பட்டு இருந்த 450 டன் ஆக்சிஜனில் தற்போது 86 டன் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் அளவிற்கு கையிருப்பு இல்லை. ஆதலால் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனை எங்கள் உபயோகத்திற்கு அனுமதிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.