தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சிபழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டுதுபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது பெற்றோர் - அ. அப்துல் அமீது - ரொக்கையா அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
தமிழ் எழுத்துருக்களுக்காக பிரதிபலன்பாராமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்து கண்டுபிடித்து நமக்கு அளித்த "தேனீ" உமர் தம்பி அவர்களுக்கு நாம் நமது நன்றிகளை செலுத்துவோம்.
தமிழ் எழுத்துருக்கள் (Thenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அதற்கு பணத்தையோ எதிர் பார்க்காமல் சேவையாற்றியவர்கள் உமர்தம்பி அவர்கள்.
மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் அதை நம் பதிவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் பதிவுகள் மூலமாக எல்லோரிடமும் பரப்புவதே நாம் அவருக்கும் அவர் பணிக்கும் செய்கின்ற நன்றிக்கடனாகும்.
தேனீ உமர் தம்பியின் தமிழெழுதியை பயன்படுத்த Unicode Tamil Keyboard இந்த லிங்கை அழுத்தவும்.
தேனீ உமர் தம்பியின் பெருமை அனைவரிடமும் பகிற்ந்து கொள்வோம்.
ReplyDelete