இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு அண்மையில் நுரையீரலில் நீர்கட்டி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நீர்கட்டி அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் யுவராஜ் சிங்கை புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியான தகவல் என்றாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் யுவராஜ் சிங்கை குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source :Dinakaran
Source :Dinakaran
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.