N

7.2.11

52 கடற்கொள்ளையர்களை இந்தியா கைது

மும்பை அருகே அரபிக் கடலில் சட்டவிரோதமாக நுழைந்த 52 கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் இணைந்து கைது செய்தது.

மேலும், கடற்கொள்ளையர்களின் கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 52 பேரில் 28 பேர் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இத்தகவலை இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் எம். நம்பியார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கும் லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.