N

4.2.11

நக்ஸலைட், பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல்: பிரதமர் எச்சரிக்கை


தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, பிப்.1: உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்ஸலைட், பயங்கரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தில்லியில் செவ்வாய்க்கிழமை உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கு நக்ஸலைட் வன்முறை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், மதவாத அமைப்புகளால் ஏற்படும் அபாயங்கள் பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை சமாளிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இவற்றை எளிதாக முறியடிக்க முடியும். பயங்கரவாதம், மத வன்முறைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் அதன் உண்மை நிலையையும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக நாட்டின் இடதுசாரி தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், மதவாதம், இன மோதல் ஆகியன மிகப் பெரிய சவாலாகும்.2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் (2010) வன்முறை, பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கை குறைந்து ராணுவத்தினரின் உயிரிழப்பு குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. இதேபோல மகாராஷ்டிரம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையும் கவலையளிப்பதாக உள்ளது. மத்திய படையுடன் இணைந்து இத்தகைய தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீஸôரையும் ஈடுபடுத்துவது குறித்து மாநில முதல்வர்கள் பரிசீலிக்க வேண்டும். நக்ஸலைட்களுக்கு எதிரான நடவடிக்கையில் மாநில போலீஸôரும், மத்திய படையும் இணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.கடந்த ஆண்டு நாட்டில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. புணேயிலும், வாராணசியிலும் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை குறைந்ததற்கான முழு பெருமையும் பாதுகாப்புப் படையினரையே சேரும். அவர்களின் அயராத கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயங்கரவாத செயல்களை தலை தூக்காமல் தடுத்துள்ளன.காஷ்மீரில் கடந்த ஆண்டு கோடைக் காலத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதைப்போன்ற சம்பவங்கள் நச்சு வளையமாகும். இது பள்ளத்தாக்கின் அமைதியை குலைத்துவிட்டது.அனைத்து கட்சிக் குழுவினர் அங்கு சென்று திரும்பிய பிறகு இப்போது அங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த அரசு அறிவித்த 8 அம்ச திட்டத்தை மாநில அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் அங்கு சகஜ நிலை உருவாக வழியேற்படுத்தியுள்ளது. கல்லெறி சம்பவங்களை தடுக்க துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களைத் தவிர வேறு உபாயங்களைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற மக்கள் எதிர்ப்புப் பேரணியைக் கையாள மாநில போலீஸôர் உரிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து அனைத்துத் தரப்பினரும் அமைதி காத்தது மிகவும் பாராட்டுக்குரியது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மிகச் சிறப்பாக செயல்பட்டு கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்தது. இப்போது வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள் குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்ஜெüதா எக்ஸ்பிரஸ், ஆஜ்மீர் தர்க்கா, ஹைதராபாதின் மெக்கா மஸ்ஜித், மலேகானில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்வங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத அமைப்புகள் தங்களது வன்முறை பாதையைக் கைவிட வேண்டும் என்று பல காலமாக வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். இதை பிரிவினைவாத குழுக்கள் உணர வேண்டும்.மாநில போலீஸýம் மத்திய படையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தும் காவல் நிலையங்களுக்குத்தான் முதலில் வரும். போலீஸôர் பொதுமக்களிடம் நண்பர்களாகப் பழகினால் பிரிவினைவாதிகள் குறித்த தகவலை எளிதாகப் பெறலாம். இத்தகைய சூழலை போலீஸôர் உருவாக்க வேண்டும்.பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பிரச்னைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் போலீஸ் அதிகாரிகள் கையாள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எதிரான வன்முறையோ அடக்குமுறையோ மேலோங்கிவிட அனுமதித்துவிடக்கூடாது. நாட்டில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் அதிகம் நடைபெறுகிறது. இதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் மாநில  அரசுகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.போலீஸ் துறையில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக பல்வேறு குழுக்கள் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. காவல்துறை என்பது அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பாக செயல்படுவதை விட அது மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக செயல்பட வைக்க வேண்டியதுதான் நமது நோக்கம். இதை மாநில அரசுகளும் உணர்ந்து அதற்கேற்ப காவல்துறையை சீரமைக்க வேண்டும்.  தில்லி காவல்துறையை சீரமைத்து அதை பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரதமர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.