N

4.2.11

பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.500 கோடியில் திட்ட மதிப்பீடு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateதிருவனந்தபுரம் : ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.500 கோடியில் தோராய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது’ என்று கேரள நீர்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறினார். இது பற்றி, திருவனந்தபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலை குழுவுக்கு ஆலோசனை கூறுவதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் ஏ.கே.கஞ்சு நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி டெல்லியில் நடந்தது. உயர்நிலை குழுவில் மத்திய அரசு நியமித்துள்ள பிரதிநிதிகள், கேரள அரசுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தவர்கள்.

இதில் ஏ.கே.கஞ்சு கடந்த 2000 & 2001ல் உச்ச நீதிமன்றம் நியமித்த முல்லைப் பெரியாறு அணை ஆய்வு குழுவில் தலைவராக இருந்தார். அந்த குழுதான் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.  அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2006ல் அணையின் உயரத்தை அதிகரிக்க உத்தரவிட்டது. தமிழ¢நாடு சார்பில் காவிரி கண்காணிப்பு குழுத் தலைவர் சுப்பிரமணியனை நியமித்துள்ளது. ஆனால், கேரள அரசு அனுதியின்றி கேரள நீர்பாசனத் துறை பொறியாளர் ஒருவரை மட்டும் மத்திய அரசு நியமித்துள்ளது.

எனவே, இந்த உயர்நிலை குழுவின் உறுப்பினர்கள் நியமனத்துக்கு கேரளா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து கேரளா பின்வாங்காது. இங்கு புதிய அணை கட்ட ரூ.500 கோடி மதிப்பில் தோராய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அணை வடிவமைப்பு குழுவினர் அடுத்த மாதம் இறுதியில் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம், வனத்துறை மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெற்று அணை கட்டும் பணி தொடங்கும்.
இவ்வாறு பிரேமச்சந்திரன் கூறினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.