N

5.2.11

தமிழக சட்டப்பேரவை: இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update சென்னை: 2011- 2012 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான இடை‌க்கால‌ ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழ‌க‌ன் தா‌க்‌க‌ல் செ‌ய்தா‌ர்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டசபையில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2011-2012ம் ஆண்டுக்கான முன்னனி மானிய அனுமதி கோரி, இந்த இடைக்கால பட்ஜெட் இந்த பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இதில் இல்லை என்றாலும், ஏற்கனவே அறிவித்து செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ‌சிற‌ப்பு அ‌ம்ச‌ங்க‌ள்:


* கலைஞ‌ர் கா‌ப்‌பீடு ‌தி‌ட்‌ட‌த்‌தி‌ல் ரூ.72 கோடி‌ செல‌வி‌ல் 2,70,000 பே‌ர் பய‌ன் பெ‌ற்று‌ள்ளன‌ர்

* 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் 168 பு‌திய ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌ங்க‌ள் ‌திற‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன.

* ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை‌க்கு ரூ. 12,674 கோடி ஒது‌க்‌கீடு

* தொ‌ழி‌ற்க‌ல்‌வி ப‌யிலு‌ம் முத‌ல் தலைமுறை ப‌ட்டதா‌ரிகளு‌க்கு ரூ. 227 கோடி ஒது‌க்‌‌கீடு

* நெடு‌ஞ்சாலை‌த்துறை‌க்கு ரூ. 5143 கோடி ‌நி‌தி ஒது‌க்‌‌கீடு

* செ‌ன்னை மெ‌ட்ரோ இர‌யி‌ல் ‌தி‌ட்ட‌ப் ப‌ணிகளு‌க்கு ரூ. 750 கோடி ஒது‌க்‌கீடு

* கலைஞ‌ர் ‌வீடு வழ‌‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்து‌க்கு ரூ. 375 கோடி ஒது‌க்‌கீடு

* காவ‌ல்துறையை ந‌‌வீன‌ப்படு‌த்த ரூ. 3,239 கோடி ந‌ி‌‌தி ஒது‌க்‌கீடு

* ‌சிறை‌த்துறை ந‌‌வீன‌ப்‌படு‌த்த ம‌ட்டு‌ம் ரூ. 140 கோடி நி‌தி ஒது‌க்‌கீடு

* ஊரக ‌வள‌ர்‌‌ச்‌‌சி‌க்கு ரூ.8,812 கோடி ‌நி‌தி ஒது‌க்‌கீடு

* நக‌ரா‌‌ட்‌சி‌க்கு ரூ.2,198 கோடி ஒது‌க்‌கீடு

* ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 337 கோடி ஒதுக்கீடு

* கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டத்திற்கு ரூ. 360 கோடி நி‌தி ஒது‌க்‌கீடு

* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு

* நீதிமன்றங்களை கட்டவும், மேம்படுத்தவும் நீதித்துறைக்கு ரூ. 633 கோடி நிதி ஒதுக்கீடு

* கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் 2,70,000 பேர் பயனடைந்துள்ளனர்.

* 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத்திட்டம் மூலம் 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 42 ஆ‌யிர‌ம் பே‌ர் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

* 108 ஆ‌ம்புல‌ன்‌‌ஸ் சேவை ‌தி‌ட்ட‌ம் 385 ஊரா‌ட்‌சி ஒ‌ன்‌றிய‌ங்க‌ளி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்படு‌கிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.