N

19.3.11

எஸ்.டி.பி.ஐ., கட்சி வேட்பாளர் அறிவிப்பு !!

ராமநாதபுரம் : சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பெயர் பட்டியலை கட்சியின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது வெளியிட்டார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு முடிவின் படி நான்கு மாநிலத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம். தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து முதல் கட்டமாக ஆறு தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாகுல் ஹமீது - ராமநாதபுரம்; அமிர்ஹம்சா - சென்னை, துறைமுகம்; உமர் - கோவை, தொண்டாமுத்தூர்; முபாரக் திருநெல்வேலி, கடையநல்லூர்; தாரிக் - பூம்புகார்; பக்ருதீன் புதுச்சேரி, நிரவிதிருபட்டினம் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.