N

19.3.11

ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள்!! குழப்பம் தீர்ந்தது!!



அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் அதே அளவு தொகுதிகளை ஒதுக்காவிட்டாலும் 21 இடங்களுக்கு குறையாமல் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது அ.தி.மு.க. அணியில் உள்ளன. தே.மு.தி.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களை வாங்கிக் கொண்டது. எனவே, நீங்கள் கேட்கும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பில் ம.தி.மு.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டணி கட்சிகள் சமரச முயற்சியால் ம.தி.மு.க.வை சேர்க்கவேண்டும் என வற்புறுத்தி உள்ளன. இதனால் அ.தி.மு.க. இறங்கி வந்து ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முன்வந்ததாகவும் ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.