நடிகர் விஜய்க்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிய வந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுக்களை விஜய் எதிர்பார்கிறார். வியகாந்துக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதுபோல் தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது. விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இப்போது விஜய்யின் மக்கள் இயக்கம் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், இந்த அமைப்புக்கு அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார். இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனது கட்சிக்கு அதிக சீட்டுக்கள் விஜய் கேட்ப்பார் என்று தெரிகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.