N

24.5.11

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம்: இந்திய மாணவர் சங்கம்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி வரும் 7ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் துணை செயலாளர் மாரியப்பன்,

இந்திய மாணவர் சங்கம் தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை கட்டுப்படுத்திட தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

அதேபோல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தற்போது அமல்படுத்திட வலியுறுத்தியும், சமச்சீர் கல்வியை உடனடியாக முழுமையாக அமல்படுத்திடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், அதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் வரும் ஜூன் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.