
டெல்லியில் யோகா குரு ராம்தேவ் உண்ணாவிரதம் துவங்கினார். போலீசார் அவரை வெளியேற்றினர். இது பற்றி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் நேற்று கூறியதாவது: ராம்தேவுடன் அரசு பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அவர் யோகா நடத்தப் போவதாக கூறி விட்டு, உண்ணாவிரதம் துவங்கி மக்களை தூண்டி விட்டார். இதனால், போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. ராம்தேவ் பலரை ஏமாற்றியுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு முதல் அவர் பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அது பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு பல ஆயிரம் கோடி சொத்து சேர்ந்தது எப்படி என்று விசாரிக்க வேண்டும். மேலும், ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் அவருக்கு யோகா குரு என்ற பெயரில் எப்படி வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது என்றும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.