N

1.8.11

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி

Manipur Mapஇம்பால்: மணிப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில், 5 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் உள்ள சங்கப்சப்பம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை பகுதி உள்ளது. இங்கு இன்று மதியம் 2.15 மணியளவில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றில், வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது.

இதில் அந்த பகுதியில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் ஓக்ராம் இபோபி சிங், பார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தகுந்த விசாரணை நடத்த கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுபேற்கவில்லை.
 


நன்றி:தட்ஸ் தமிழ்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.