சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் 10 மாநகராட்சிகளிலும் முற்பகல் 11 மணி நிலவரப்படி சராசரியாக 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை தொடங்கி நடந்து வரும் வாக்குப் பதிவு இரு விதமான நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் விறுவிறுப்பு காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சற்று நிதானமான வாக்குப் பதிவு காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் மந்த நிலை காணப்படுகிறது.
மாநகரங்களைப் பொறுத்தவரை சராசரியாக 10 மாநகராட்சிகளிலும் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 15 சதவீத அளவிலும், மதுரை, கோவை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் சராசரியாக 20 சதவீதமும் பதிவாகியுள்ளன.
நெல்லை மாநகராட்சியில் 15 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் ராமநாதபுரத்தில் 20 சதவீத அளவிலும், சிவகங்கை மாவட்டத்தில் 15 சதவீத அளவிலும் வாக்குப் பதிவு உள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.