N

17.10.11

மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ


மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் கும்பகோணத்தில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைத் தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆம்புலன்ஸ்,  உடல்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கும் குளிர்பதனபெட்டி போன்றவைகள் மக்கள் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், 7 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவி்டடு தப்பிவிட்டனர். தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து போனது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி சோழபுரம் நகர தலைவர் முகமது பாரூக் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.