N

25.10.11

சேவை செய்ய வயது ஒரு தடையல்ல - 102 வயது மூதாட்டி!

மதுரை மாவட்டத்தில் உள்ள புதுக்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் தடகதி எனும்  102 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார். கிராமப் புற மருத்துவச்சி தொழில் செய்து வரும் தடகதி, 1000 பேருக்கு மேல் பிரசவம் பார்த்தவராவார்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 102 வயது மூத்தவர் என்ற சாதனையைச் சத்தமில்லாமல் செய்து இருக்கிறார் தடகதி.
''என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பணத்தையோ, அரசுப் பணத்தையோ மோசடி செய்ய மாட்டேன்'' என்பதே இவரது தேர்தல் வாக்குறுதியாம். ''என் கிராமத்தில் அமைதி நிலவ உரிய முயற்சி எடுத்து விட்டு ஊரை சுத்தம் செய்வதே என் முதல் பணி'' என்று கூறும் தடகதியின் பேச்சில் நம்பிக்கை தெரிகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.