N

18.10.11

இந்தியவில் இருந்து ஹஜிக்கு சென்ற16 பேர் மரணம்!!!


இந்தியாவிலிருந்து இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக  இதுவரை 57,805 யாத்ரீகர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 16 பேர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறப்பைத் தழுவியதாகவும், சவூதி அரேபிய அரசு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளியன்று நிலவரப்படி, இந்திய யாத்ரீகர்களில் 22,792 பேர் புனித மக்கா நகரிலும், ஏனைய 35,001 பேர் புனித மதீனா நகரிலும் உள்ளதாகத் தெரிகிறது.
இதுவரை 209 விமானங்கள் இந்திய யாத்ரிகர்களைச் சுமந்து வந்துள்ளன.
இம்முறை, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் ஒருபெண், புனித மதீனா நகரில் அழகியதொரு  பெண்குழந்தையை வெள்ளியன்று பிரசவித்ததாகவும், இந்திய ஹஜ் பயணிகளின் வரலாற்றில் புனித நகரொன்றில் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது இதுவே முதல்முறை என்றும் சவூதி அரேபிய அரசின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.