N

15.10.11

ஹஸாரேயின் போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு!


அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தனி நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் தாங்கள் பூரண ஆதரவை அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் 3 தேசிய நிர்வாக குழு கூட்டத்திற்கு வருகைத்தந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மன்மோகன் வைத்யா தெரிவித்தார்.
ஆனால் ஜனலோக்பால் மசோதாவின் பிரச்சாரத்திற்கும், ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு கிடைக்கவில்லை என அன்னா ஹஸாரே முன்னர் தெரிவித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் தான் ஹஸாரே போராட்டம் நடத்துகிறார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்து இவ்வாறு தெரிவித்திருந்தார் ஹஸாரே.
ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கூட தனது போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் தன்னது அவமதிப்பதற்கான காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ் கூட்டு முயற்சிதான் இதன் பின்னணியில் உள்ளது என ஹஸாரே குற்றம் சாட்டியிருந்தார். அதேவேளையில் ஹஸாரேயின் போராட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் பங்களிப்பு பலவேளைகளிலும் நிரூபணமானது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.