நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகோதரர் அஸ்லம் அவர்கள் மற்றும் 21 வார்டு உறுப்பினர்களும்நாளை காலை பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர் .
நமதூர் சகோதரர்கள் அனைவரும் பணிநிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர். இன்னும் தேர்தல் நேரத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சகோதர்கள் எனக்காக துஆ செய்த நல் உள்ளங்கள் என எனது வெற்றிக்காக அல்லும் பகலும் அயாரது உழைத்த அன்பர்கள் அனைவரையும் நேரில் அழைப்பு கொடுக்க எண்ணினாலும் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் நமதூர் இணையதளங்களில் வாயிலாக அழைப்பு கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்.
எனவே அன்புள்ளம் கொண்ட அதிரை நகர பொதுமக்கள், வாக்காளர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள் அனைவரும் இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று நாளை காலை நடைபெற இருக்கும் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கு தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . வஸ்ஸலாம்.
SH.அஸ்லம்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.