முத்துப்பேட்டையில் நேற்று நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட கருத்து முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்துவா? முஸ்லிமா? என்ற கேள்வியை எழுப்பி நச்சு கருத்தை வெளியிட்ட நக்கீரன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலா அல்லது, இரு மதங்களுக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலா அவர்கள் வெளியிட்டார்கள் என்பது மக்களுக்கு புரியவில்லை.
எனினும் முத்துப்பேட்டையை பொறுத்த வரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து சமுதாய மக்களும் சகோதர் வாஞ்சையுடன் தான் வாழ்த்து வருகின்றனர் என்பது அந்த நாக்கீரனுக்கு தெரியவில்லையே என்பது முத்துப்பேட்டை மக்களின் கேள்வியாக இருக்கிறது. பல்வேறு ஆண்டுகளாக முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒரு முறை முஸ்லிம்கள் மறுமுறை இந்துக்கள் என்று மாறி மாறி பதவியில் அமருகின்றனர். அவ்வாறு தனது பதவியை விட்டுக்குக் கொடுக்கும் மனப்பான்மையில் தான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் எங்களிடம் ஏன் இந்த அவல போக்கு நக்கீரனுக்கு?
இது குறித்து முத்துப்பேட்டை இணையதள நிருபர் திருவாரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்த தகவலுக்கு இதுவரை யாரும் எழுத்து பூர்வமாக புகார்கள் தெருவிக்க வில்லை என்றும், அவ்வாறு யாரேனும் புகார் தெருவித்தால் சம்மந்தப் பட்டவர்கள் மீது விசாரணை நடத்துவோம் என்றும் அவர் தெருவித்தார்.
நக்கீரன் (இவர்களின்) முகத்திரையை கிழிக்கும் விதமாக முத்துப்பேட்டை நலம் விரும்பும் சகோதரர்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சுவரொட்டி வெளியிட்டனர் அது பின் வருமாறு.
நன்றி:முத்துபேட்டை எக்ஸ்பிரஸ்
முஸ்லீம் மற்றும் ஹிந்துக்களுக் கிடையில் பிளவை ஏற்படுதத நக்கீரன் திட்டமா! இதை வண்மையாக கண்டிக்கிறேம்!
ReplyDelete