மெல்போர்ன்:ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் தொடங்கியிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்களை எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் கோவான் 68 ரன்களையும், ரிக்கி பாண்டிங் 62 ரன்களையும், பீட்டர் சிடில் 41 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜாகீர் கான் 4 விக்கெட்டுக்களையும், யாதவ் 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின் 3 விக்கெட்டையும் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தற்போது இந்திய நேரம்(மதியம்:2.00) நிலவரப்படி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் 3 ரன்களில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் 67 ரன்களும், சச்சின் 73 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். டிராவிட் 68 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா ரன் ஏதுமின்றி விளையாடி வருகின்றனர்.
இத்தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.