N

28.12.11

டிராபிக் விதிமீறல்களுக்கு புனித நூல்களைக் கொண்டு சத்தியமா?


குர்கான்:சாலை விதிமுறைகளை மீறுபவர்களை அவரவர்களின் புனித நூல்களைக் கொண்டு சத்தியம் செய்ய வைத்து, பல்வேறு மதத் தலைவர்களின் கண்டனத்தையும் சம்பாதித்து வருகிறது குர்கான் டிராபிக் போலீஸ் அதிகாரிகள்.
ஒரு முஸ்லிம் அமைப்பு இதற்கு போராட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. குர்ஆனை கொண்டு லாரி டிரைவர்களை சத்தியம் செய்ய சொல்வதைக் கண்டிக்கும் விதமாக ஃபத்வா கொடுக்க ஜம்மியத்துல் மாஹிம் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஹிந்து மற்றும் சீக்கிய மதத் தலைவர்களும் டிராபிக் போலீஸின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உணர்ச்சிப்பூர்வமாக ஓட்டுதல் என்ற புதிய உத்தியை எடுத்துக்கொண்டு குர்கான் போலீஸ், விதிகளை மீறும் கனரக ஓட்டுனர்களுக்கு முதலில் அபராதமும் பின்னர், புனித நூல்களைக் கொண்டு சத்தியமும் செய்ய வைக்கின்றனர்.
எந்தவித சாலைவிதி மீறல்களுக்கும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்குர்ஆனை இதுபோன்ற விஷயங்களுக்கு எடுக்க எங்கள் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று டெல்லியைச் சேர்ந்த ஜம்மியத்துல் மாஹிம் நிர்வாகி கூறியுள்ளார்.
டிராபிக் அதிகாரி அமர் சுஹான் கூறுகையில், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அவரவர் புனித நூல்களைக் கொண்டு சத்தியம் செய்ய வைத்திருக்கின்றோம். இனி அவர்கள் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.