N

12.4.12

23 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு : 18 நபர்களுக்கு ஆயுள், ஐவருக்கு 7 ஆண்டு


அஹ்மதாபாத் : கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் 2002 ல் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொல்லபட்டார்கள். அச்சம்பவங்களில் ஒன்று ஒன்றாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

அப்படி ஒடி கிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த 23 முஸ்லீம்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதையும் அவ்வழக்கில் 23 நபர்களுக்கு தண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும் கொடுக்கப்பட்டதை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம். 

இன்று அவர்களுக்கான தீர்ப்பு அளிக்கப்பட்டது. படேல் இனத்தை சார்ந்த 23 நபர்களும் சட்ட விரோதமாக கூடுதல், கலவரம், சதித்திட்டம் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர் பார்மர் இச்சம்பவத்தை அரிதினும் அரிதான ஒன்றாக கருதி தூக்கு தண்டனை அளிக்க வலியுறுத்தினார்.

தண்டனை அளிக்கப்பட்ட 23 நபர்களில் கொலை செய்த குற்றத்தில் 18 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு கொலை செய்ய உதவியதாக 7 ஆண்டு தண்டனையும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.