லாஸ்வேகாஸ்: 'ஏ.டி.எம்.' எந்திரங்கள் மூலம் பணம் மற்றும் தங்க காசுகள், தங்க கட்டிகள் மட்டும் பெற முடியும் என நினைக்காதீர்கள். தற்போது பழைய செல்போன்கள் எம்.பி.3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றை விற்பனை செய்து தரும் மையமாகவும் 'ஏ.டி.எம்.' எந்திரம் திகழ்கிறது.
இதற்காக அதிநவீன 'ஏ.டி.எம்.' எந்திரம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக்ஸ் ஏ.டி.எம். எந்திரம் ஒரு 'கப் போர்டு' அளவே உள்ளது. அதில், தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. அதில், உலோகத்தினால் ஆன பெரிய வாய் பகுதி உள்ளது. அதன் வழியாகதான் செல்போன்கள், சிறிய அளவு கம்ப்யூட்டர்கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்றவற்றை உள்ளே செலுத்த வேண்டும்.
இந்த எந்திரத்தின் 'நெட்வொர்க்' தொடர்பு நூற்றுக்கணக்கான எலெக்ட்ரானிக் கம்பெனிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விற்பனை செய்ய விரும்பும் செல்போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யும். அவற்றில் எந்த விலைக்கு விற்பனை செய்ய விரும்புகிறோமோ அந்த தொகைக்குரிய பட்டனை அழுத்தினால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புதிய வகை ஏ.டி.எம். எந்திரம் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதிரை செய்தி வெப்சைட் நல்லாவே இல்ல!
ReplyDeleteஅது எண்ணப மக்கள் அரங்கம் அரட்டை அரங்கம்.
ReplyDeleteஇது தேவையா?
அது எண்ணப மக்கள் அரங்கம் அரட்டை அரங்கம்.
ReplyDeleteஇது தேவையா?
plz Remove this type of unnessary comments
ReplyDelete