N

7.2.11

நடுத்தர பிரிவினர் எண்ணிக்கை 27 கோடியாக அதிகரிக்கும்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபுதுடெல்லி : அடுத்த 5 ஆண்டுகளில் நடுத்தர பிரிவு மக்கள் எண்ணிக்கை 27 கோடியாக அதிகரிக்கும் என தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த அமைப்பின் நுகர்வோர் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போதைய நிலவரப்படி நாட்டில் 3.14 கோடி நடுத்தர குடும்பங்கள் உள்ளன. தனி நபர் அடிப்படையில் நடுத்தர பிரிவினர் எண்ணிக்கை 16 கோடியாக உள்ளது. இது 2015&16ம் ஆண்டில் 26.7 கோடியாக அதிகரிக்கும். இதே காலத்தில் நடுத்தர குடும்பங்கள் எண்ணிக்கை 5.33 கோடியாகும்.

கடந்த 2009&10 விலை நிலவரப்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3.4 லட்சம் முதல் ஸி17 லட்சம் வரை இருந்தால் அது நடுத்தர குடும்பமாக கருதப்படுகிறது. 2000&01 விலை நிலவரப்படி இது ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தது. ÔÔஅடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல நகரமயமாவதும் வேகமாக அதிகரித்து வருவதால் நடுத்தர பிரிவு மக்கள் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கும்ÕÕ என என்சிஏஇஆர் நுகர்வோர் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ராஜேஷ் சுக்லா தெரிவித்தார்.

2025&26ம் ஆண்டில் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை 11.38 கோடியாகவும், நடுத்தர மக்கள் தொகை எண்ணிக்கை 54 கோடியாகவும் இருக்கும். இதன் காரணமாக, கார், டிவி, கம்ப்யூட்டர், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட நுகர்வு பொருட்களுக்கான தேவையும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். நாட்டில் உள்ள மொத்த கார்களில் 49 சதவீதமும், டிவிகளில் 21 சதவீதமும், கம்ப்யூட்டர்களில் 53 சதவீதமும், ஏசிகளில் 53 சதவீதமும் நடுத்தர மக்களிடம் உள்ளன.

ஆனால் மொத்த மக்கள் தொகையில் நடுத்தர மக்கள் தொகை எண்ணிக்கை 13.1 சதவீதம் மட் டுமே. இது 2015ல் 20 சதவீதமாகவும், 2025ல் 37 சதவீதமாகவும் அதிகரிக்கும். இந்த பிரிவு மக்கள் சராசரியாக தங்களது வருமானத்தில் 50 சதவீதத்தை செலவிடுகின்றனர். வாங்கும் சக்தி அதிகம் உள்ள இவர்களை இலக்காக கொண்டுதான் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.